நீலகிரி மாவட்டம், குன்னூர், பரசுராம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவர் வண்ணாரப்பேட்டையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாணயங்கள் சேகரித்து வரும் இவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளின் பழங்கால நாணயங்கள், தற்போதைய பணத்தாள்களையும் சேகரித்து வருகிறார். மேலும், நீலகிரி, கரூர் உள்பட 40 இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக நாணயக் கண்காட்சியையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், விநாயகர் உருவம் பொறித்த 2003ஆம் ஆண்டின் இந்திய நாணயம், 2000ஆம் ஆண்டின் தாய்லாந்து நாணயம், இந்தோனேஷியாவின் பணத்தாள் ஆகியவை அவரது சேகரிப்புகளில் இருந்ததை அடுத்து, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, நேற்று (ஆக. 22) கோயிலுக்குச் சென்று வழிபட்டும், அந்நாணயங்களைக் கொண்டு விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
நாணயங்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது முக்கியக் குறிக்கோள் என்கிறார் ராஜேஷ்.
இதையும் படிங்க...அரசுப் பள்ளியில் நடந்த பழைய நாணயங்கள் கண்காட்சி!