ETV Bharat / state

பொங்கல் விழா: மலைவாழ் மக்களோடு நடனமாடிய ஆட்சியர்! - பாரம்பரிய உடை

நீலகிரி: உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் படுகர், தோடர் இன மலைவாழ் பெண்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் நடனமாடியதைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

danced with mountain people
danced with mountain people
author img

By

Published : Jan 16, 2020, 10:22 AM IST

பொங்கல் விழாவில் ஆட்சியர்

நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக உதகை படகு இல்லத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொங்கல் விழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்திருந்த நிலையில், புது பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகர், தோடர் இன மக்களின் கலாசார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்னசென்ட் திவ்யா நடனம்

அதில் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்துவந்த படுகர், தோடர் இன பெண்கள் வட்டமாக நின்று நடனமாடினர். அதனை அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா படுகர் இன மலைவாழ் பெண்களுடன் இணைந்து நடனமாடினார்.

அதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகளும் மலைவாழ் மக்களோடு சேர்ந்து நடனமாடி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

மலைவாழ் மக்களோடு நடனமாடிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

சிறப்புப் படகுப் போட்டி

அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கிடையே சிறப்புப் படகு போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:உரியடி' 'மாட்டுவண்டி சவாரி' பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Intro:OotyBody:உதகை 15-01-20
உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் படுகர் மற்றும் தோடர் இன மலைவாழ் பெண்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் உள்பட சுற்றுலா பயணிகளும் இணைந்து நடனமாடியதை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்…
நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை சார்பாக உதகை படகு இல்லத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்த நிலையில் புது பானைகளில் பொங்கல் வைக்கபட்டு அனைவருக்கும் வழக்கபட்டது. அதனை தொடர்ந்து படுகர் மற்றும் தோடர் இன மக்களின் கலாச்சார நடன நிகழச்சி நடைபெற்றது. அதில் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து படுகர் மற்றும் தோடர் இன பெண்கள் வட்டமாக நின்று நடனமாடினர்.
அதனை அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யாவும் படுகர் இன மலைவாழ் பெண்களுடன் இணைந்து நடனமாடினார். அதனை கண்ட சுற்றுலா பயணிகளும் மலை வாழ் மக்களோடு சேர்ந்து நடனமாடி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு இடையே சிறப்பு படகு போட்டிகளும் நடத்தபட்டது. அதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.