நீலகிரி: தமிழ்நாட்டின் மாநில விலங்காக வரையாடு உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆடுகள் ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை தொடரிலுள்ள நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் காணபடுகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சி, முக்குருத்தி, அப்பர்பவானி வன பகுதிகளிலும் கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை வன பகுதியிலும் வாழ்ந்து வருகின்றன.
குளிர் பிரதேசத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் இந்த ஆடுகள், தற்போது 250-க்கும் குறைவாகவே உள்ளன. அழிவின் விளிம்பிலுள்ள இந்த ஆடுகளை பதுகாக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் அதனை செயல்படுத்த வரையாடு பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் வரையாடுகளை செயற்கை முறையில் அபிவிருத்தி செய்து வன பகுதியில் விட வேண்டும் என்றும், இதற்கான அபிவிருத்தி மையம் உதகையில் செயல்பட்டு வந்த மான் பூங்காவில் அமைக்க கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் தமிழ்நாட்டில் சுற்று சூழலை மேம்படுத்த 849 கோடி ரூபாய் ஒதுக்கபட்டுள்ளதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விமர்சனங்களுக்கு பதில் செயலில் காட்டுவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்