நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இரவில் இருந்தே தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் பழமையான தடுப்பு சுவர் குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்தது.
இதில் சமி முல்லா என்பவரது வீடு சேதம் அடைந்து மூவர் வீட்டினுள் சிக்கிக் கொண்டனர். ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா ஆகிய மூவர் வீட்டினுள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, குன்னூர் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் தீவிரமாக இரண்டு மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு மூவரையும் மீட்டனர். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் குடியிருப்பு வாசிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தாமல் ஏரியில் கலெக்டர் ஆய்வு - கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு!