உதகை நகரிலிரிருந்து தினந்தோறும் சுமார் 5 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கபடுகிறது. இவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கபட்டு 2 இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், பிளாஸ் கழிவுகளுடன் கூடிய குப்பைகள் தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டுவரும் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று திறந்த வெளியில் கொட்டப்படுகிறது.
ஆனால், அந்தக் குப்பை கிடங்கிற்கு உணவு தேடி வரும் கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் சீரண கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்துவருகிறது. எனவே, குப்பை கிடங்கை சுற்றி சுவர் அமைத்தால் மட்டுமே வன விலங்குகள் இறப்பை தடுக்க முடியும் என நீலகிரி மாவட்ட வனத்துறையினர் உதகை நகராட்சி அலுவலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவருவதாக கூறப்படுகிறது.
எனவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்