ETV Bharat / state

கரோனா தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு!

தமிழ்நாட்டின் கரோனா தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pasteur Company  Pasteur Institute of India  Pasteur Company produce corona vaccine  Corona vaccine  கரோனா தடுப்பூசி  பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  கரோனா தடுப்பூசி உற்பத்தி
Pasteur Company produce corona vaccine
author img

By

Published : Apr 29, 2021, 8:03 AM IST

இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இந்த சூழலில் அனைத்து மாநிலங்களும் கரோனா தொற்றைக் கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மத்திய அரசு இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசிகளை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நம்நாட்டின் கரோனா தடுப்பூசித் தேவையை பூர்த்திசெய்ய பொதுத்துறை நிறுவனங்களை கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாஸ்டர் நிறுவனம்

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் மனோகரன் கூறுகையில், 'நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பாஸ்டர் தடுப்பு ஊசி நிறுவனம் 100 ஆண்டுகளாக காசநோய், ரேபிஸ், பி.ஜி.சி தடுப்பூசிகளின் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிமுறை குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்நிறுவனங்களின் உற்பத்தி திறனும் தரமும் சுமார் நூறு கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி தயாரிக்க ஏதுவான அனைத்துக் கட்டமைப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனமான பாஸ்டர் கரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: எந்த ரக கரோனாவையும் எதிர்த்து நிற்கும் கோவாக்சின் - ஐசிஎம்ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.