நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகம் மற்றும் கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் அமைப்பு ஒன்றிணைந்து மார்க்கெட் பகுதி, வி.பி.தெரு, மவுண்ட்ரோடு ஆகிய பகுதிகளில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள், வணிகர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், முகக் கவசம் அணிவது குறித்தும், தகுந்த இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர் பரமேஸ்வரன், பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், குன்னூர் அனைத்து வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், பொதுநல அமைப்பைச் சார்ந்தவர்கள், தோழமை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.