நீலகிரி: குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குன்னூர் தாலுகா செயலர் மனோஜ் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் மணி, பிரபாகரன், சுதர்சன், மாவட்ட தலைவர் வினோத்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மேலும் குன்னூர் பகுதி தொழிற்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள், மகளிர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமிதாப் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!