நீலகிரி மாவட்ட எல்லையோர வனப்பகுதிகளில் அதிரடி காவல் துறையினரும் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கக்கனல்லா, கேரள மாநிலம் நிலம்பூர் வனத்தை ஒட்டிய, தமிழ்நாடு எல்லையிலுள்ள நாடுகாணி, பாட்டவயல் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் அருகே கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கூடலூர், நாடுகாணி, கக்கனல்லா, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு, மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கேரளா 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், நான்கு நாட்களுக்கு முன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணிக்க வாசகம் என்பவர் உயிரிழந்தார். இவர் கபினி தளம் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதின் எதிரொலி சோதனைச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!