வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக அரசியல் தலைவர்களின் சின்னங்கள், சிலைகள் துணிகளால் மறைக்கப்பட்டுள்ளன. போஸ்டர்கள் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்கள், தடுப்புச் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வெலிங்டன் காவல்நிலையம் அருகிலேயே ஒட்டப்பட்டிருந்த இவை கண்டுகொள்ளப்படாமல் இருந்துள்ளன. தேர்தல் அலுவலர்கள் இவற்றை முழுமையாக கண்காணித்து அகற்ற மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: போஸ்டர் ஒட்டிய பாஜக, அதிமுக மீது வழக்கு!