ETV Bharat / state

வீடு வீடாகச் சென்று மருந்து தெளிக்கும் பஞ்சாயத்து தலைவி - நீலகிரியில் கரோனா விழிப்புணர்வு

நீலகிரி: கரோனா தொற்றிற்கு எதிராக வீடு வீடாகச் சென்று மருந்து தெளித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் பஞ்சாயத்து தலைவியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது‌.

கரோனா விழிப்புணர்வில் வண்டிச் சோலை பஞ்சாயத்து தலைவி

author img

By

Published : Mar 30, 2020, 10:42 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெரும்பான்மையான கிராம மக்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று வட மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருவோர்களும் தேயிலை தோட்டங்களில் தினக்கூலி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் விழிப்புணர்வின்றி சர்வ சாதாரணமாக மக்கள் உலா வந்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வண்டிச்சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட ஏழு கிராமங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பஞாசாயத்து தலைவி மஞ்சுளா வீடு வீடாகச் சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா விழிப்புணர்வில் வண்டிச் சோலை பஞ்சாயத்து தலைவி

குறிப்பாக வண்டிச்சோலை, அடார் எஸ்ட்டேட், சோலாடா மட்டம் நஞ்சப்பச்சத்திரம் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் கரோனா குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பாராட்டும் வரவேற்பை பெற்றுள்ளது

இதையும் படிங்க: ஓபிஎஸ் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.