ETV Bharat / state

அரசு மதுபான கடையை மூடுங்கள் - எங்களால் நிம்மதியாக வாழ முயடில..!

நீலகிரி: பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை மூடக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

tasmac_issue
author img

By

Published : Jul 30, 2019, 1:38 PM IST

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 30 அரசு மதுபான கடைகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு மதுபான கடையை மூடுங்கள்

தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்து வந்த அவர்கள், பில்லிகம்பை கிராமத்தில் பள்ளி, கோயில், ரேசன் கடை ஆகியவற்றின் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும், இந்தக் கடையானது பொதுமக்கள் கூடும் மையப்பகுதியில் அமைந்துள்ளதாகவும், அங்கு மது அருந்துபவர்கள் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்வதாகவும், இதனால் பெண்களும், மாணவர்களும் அந்த வழியாக சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே அந்தக் கடையை மூட வலியுறுத்தி பலமுறை அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கபட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Intro:OotyBody:
உதகை 29-07-19
பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூடக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் இன பெண்கள் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 30 அரசு மதுபான கடைகள் உயர் நீதிமன்ற உத்தரவு படி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த கிராமத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் இன பெண்கள் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்து வந்த அவர்கள் பில்லி கம்பை கிராமத்தில் பள்ளி, கோவில், ரேசன் கடை ஆகியவற்றின் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும், இந்த கடையானது பொதுமக்கள் கூடும் மைய பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அந்த கடைக்கு வரும் குடி மகன்கள் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்வதாகவும,; இதனால் பெண்களும், மாணவர்களும் அந்த வழியாக சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே அந்த கடையை அங்கிருந்த மூட கோரி பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கபட்டதாகவும், ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டி: லதா – பில்லிகம்பை
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.