நீலகிரியில் பூ மாலை வணிக வளாகத்தில் திருநங்கைகளின் வாழ்வு ஆதாரத்தை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலக மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர். வள்ளலார் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வள்ளலார், ' திருநங்கைகள் போன்று சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வு ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்று பாலகங்கள் மாநிலத்தில் தேவைப்படும் இடங்களில் அமைத்துத் தரப்படும். இன்னும் ஒரு வார காலத்தில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தி இதுவரை எட்டிராத சாதனை அளவை எட்டும்.
மேலும் மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் மாடு வளர்க்க திருநங்கைகள் முன்வந்தால் அதற்கான கடனுதவி அவர்களுக்கு வழங்கப்படும். ஆவின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய பொருள்களை அறிமுகம் செய்து வருகிறோம்' என்றார்.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு உதவும் காவல்துறையினர்