ETV Bharat / state

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை! - நீலகிரி

நீலகிரி: ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தடை
author img

By

Published : Jul 12, 2019, 8:24 PM IST

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக் பயன்படுத்த முழு தடை விதித்துள்ளார். அதனை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கபட்டுள்ளன. இதனால் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதற்கு மாற்று ஏற்பாடாக உதகை தாவரவியல் பூங்கா உட்பட முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீர் ஏ.டி.எம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவிலான தண்ணீர் பாட்டில்களை சாலை ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.

நீலகிரி

Intro:OotyBody:
உதகை 12-07-19
வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை. 5 ரூபாய் செலுத்தினால் 1லிட்டர் தண்ணீர் கிடைக்க தண்ணீர் ஏடிஎம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக் பயன்படுத்த முழு தடை விதித்து உள்ளார். அதனை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கபட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனிடையே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகள் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து அதற்கு மாற்று ஏற்பாடாக உதகை தாவரவியல் பூங்கா உள்பட முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீர் ஏ.டி.எம்.களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவிலான தண்ணீர் பாட்டிகளை சாலை ஓரங்களிலும், வனபகுதிகளிலும் வீசி செல்வதால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகளை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதன் படி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தடை ஆகஸ்ட் 15- முதல் அமலுக்கு வரும் என்ற அவர் மாற்று ஏற்படாக முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பர்லியார்-குன்னூர்-உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, உதகை-கோத்தகிரி நெடுஞ்சாலையிலும் தண்ணீர் ஏ.டி.எம்கள் பொறுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தண்ணீர் ஏ.டி.எம் வீதம் பொறுத்தபடும் என்றார். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு குடிநீர் தேவை என்றால் இந்த தண்ணீர் ஏ.டி.எம்களில் உள்ள எந்திரத்தினுள் 5 ரூபாய் செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீரை பிடித்து கொள்ள முடியும் என்றார்.
பேட்டி: இன்னசென்ட் திவ்யா – நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.