நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வெள்ளரி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் கீர்த்தி. இவர் நேற்று (மார்ச் 29) வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கடையில் சில பொருள்களை வாங்கியுள்ளார். பின் அந்த இளைஞர் கீர்த்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
தற்போது இந்தக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது