நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேயிலை விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு பசுந்தேயிலைக்கு மிகக் குறைந்த விலையாக பத்து ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ள காலநிலையும் விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் கடும் குளிரும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இருப்பதால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றனர்.
இந்த தேயிலைச் செடிகளைக் காப்பாற்ற விவசாயிகள் சிலர் ஸ்பிரிங்ளர் சொட்டு நீர்ப்பாசன கருவி மூலம் நீரைப் பீய்ச்சி அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஓரளவு தேயிலைச் செடிகளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோக்கர்ஸ் வாக்கின் குறிஞ்சி தோட்டத்தைப் பராமரிக்கக் கோரிக்கை!