ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் வழிகாட்டிகள்: ஆட்சியரிடம் பறந்த புகார் - சுற்றுலா பயணிகள்

நீலகிரி: உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடகைக் கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

taxi drivers
author img

By

Published : Sep 24, 2019, 8:13 AM IST

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, பைக்காரா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல வாடகைக் கார்கள் இயங்கிவருகின்றன.

வாடகைக் கார் தொழிலை நம்பி ஏராளமானோர் இருந்துவரும் நிலையில் சமீப காலங்களாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா வழிகாட்டி என்று கூறிக்கொண்டு பலர் ஏமாற்றி வருவதாகவும் அதில் சிலர் பெரிய டிராவல்ஸ்களுக்குச் சொந்தமான வேன்கள், பேருந்துகளில் தரகுத் தொகையை பெற்றுக்கொண்டு அனுப்பிவைப்பதாகவும் புகார் எழுந்துவருகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அவ்வாறு பெரிய வேன்களில் சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதால் சிறிய வாடகைக் கார் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி என்று கூறி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் ஆட்டோ ஓட்டுநர்களின் மனித நேயம் -பொதுமக்கள் பாராட்டு

Intro:OotyBody:
உதகை 23-09-19
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஏராளமான வாடகை கார் ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகார் அளித்தனர்….
மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கண்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா, தவரவியல் பூங்கா, பைக்காரா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல வாடகை கார் இயங்கி வருகின்றன. வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமனோர் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலா வழிகாட்டி என்று கூறி ஏமாற்றி வருவதாகவும், அதில் சிலர் பெரிய டிராவல்ஸ்களுக்கு சொந்தமான வேன்கள் மற்றும் பஸ்களில் கமிசன் தொகையை பெற்று கொண்டு அனுப்பி வைப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது. அவ்வாறு பெரிய வேன்களில் சுற்றுலா பயணிகளை; அனுப்புவதால் சிறிய வாடகை கார் தொழில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி என்று கூறி சுற்றுலா பயணிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு ஏராமான வாடகை கார் ஓட்டுனர்கள் வந்து புகார் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம் நடத்தபடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டி:கோபால் மணி – உதகை வாடகை கார் ஓட்டுனர் சங்க நிர்வாகி
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.