நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளுக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சிறிய நடைபாதை போல மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மஞ்சனக்கொரை பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், உதகை – அவலாஞ்சி சாலையில் போராட்டம் நடத்தினர்.
இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிக்க: குழந்தைகள், முதியவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்!