தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக விளங்கும் உதகையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது.இதனால் வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்றாலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தேயிலை தோட்டம் முழுவதும் பனிமூட்டம் நிரம்பி காணப்படுவதால் தேயிலை விவசாயம் பாதிக்கபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் பெய்து வந்த மழை சற்று ஓய்ந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.