ETV Bharat / state

படகு சவாரி தொடங்க மசினகுடி மக்கள் அரசிடம் கோரிக்கை! - படகு சவாரி தொடங்க மசினகுடி மக்கள் கோரிக்கை

நீலகிரி: உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை வழித்தட பிரச்னையால் வாழ்வாதாரமின்றி தவித்துவரும் மக்களுக்கு அரசு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

boat-house
author img

By

Published : Oct 15, 2019, 11:30 PM IST

Updated : Oct 16, 2019, 2:08 AM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதி, முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் முதுமலையை சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் மசினகுடி பகுதியிலுள்ள தனியார் விடுதிகளில் ஓய்வெடுப்பார்கள்.

இந்த விடுதிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். இந்த நிலையில் கடந்தாண்டு யானை வழித்தடம் பிரச்னை காரணமாக 38 தனியார் விடுதிகள் மூடப்பட்டன. இதனால் தனியார் விடுதிகளை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வேலைவாய்ப்புயின்றி தவித்துவரும் அம்மக்கள் பயன்பெறும் விதமாக மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி, மரவகண்டி ஆகிய ஏரிகளில் படகு சவாரி தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியை மட்டும் பார்த்துச் செல்கின்றனர். இயற்கை அழகு நிறைந்த இந்த ஏரிகளில் படகு சவாரி தொடங்கினால், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்று மகிழ்ச்சியுடன் செல்வார்கள். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குரும்பர்பாடி, மரவகண்டி ஏரிகள்

இதையும் படிங்க: நலிந்துவரும் யூகலிப்டஸ் தைலத் தொழில்!

Intro:OotyBody:உதகை 15-10-19

உதகை அருகே மசினகுடி பகுதியில் யானை வழித்தட பிரச்சனையால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு மசினகுடி மற்றும் மரவகண்டி ஏரிகளில் படகு சவாரி தொடங்கி வேலை வாய்ப்பு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியானது முதுமலை புலிகள் காப்பக வன பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி சென்றனர். இந்த தங்கும் விடுதிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு யானை வழிதடம் பிரச்சனை காரணமாக 38 தனியார் விடுதிகள் மூடபட்டன. இதனால் தனியார் விடுதிகளை நம்பி இருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. இதனையடுத்து வேலை வாய்ப்பு இன்றி தவித்து வரும் மக்கள் பயன்பெறும் விதமாக மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி ஏரி மற்றும் மரவகண்டி ஏரி ஆகிய ஏரிகளில் படகு சவாரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வன பகுதியை மட்டும் பார்த்து செவ்கின்றனர். இயற்கை அழகு நிறைந்த இந்த ஏரிகளில் படகு சவாரி தொடங்கினால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்று மகிழ்ச்சியுடன் செல்லவார்கள். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.Conclusion:Ooty
Last Updated : Oct 16, 2019, 2:08 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.