கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய வழக்கு விசாராணைக்கு சயான், மனோஜ், தீபு உள்ளிட்ட பத்து பேர் நேரில் ஆஜராகினர்.
இதனையடுத்து, சயான் உள்ளிட்ட பத்து பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அப்போது, சயான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், சயானை சிறையில் துன்புறுத்தவதாகக் கூறி மனு ஒன்றை நீதபதியிடம் வழங்கினார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சயான் தன்னை தண்டனை கைதி சிறையில் அடைத்து துன்புறுத்துகின்றனர் என்றும் மாலை 5 மணிக்கு, தான் இருக்கும் சிறை அறையை அடைப்பதுடன் மின்சாரம் இல்லாமல் இருட்டறையில் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் முறையிட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.