நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 10 பேரில் எட்டு பேரை மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலநந்தகுமார், குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் வழக்கை வேண்டுமென்றே காலம் கடத்துவதாக வாதிட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வடமலை வழக்கை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.