நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், உதகை மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் நுழைவுவாயில் அருகே மழைநீர் நிரம்பி சாலையில் தேங்கியுள்ளது. மேலும், ரயில்நிலையம், படகுஇல்லம் செல்லும் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு கோடப்பமந்து கால்வாய் சரிவர தூர்வாராததே காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர் மழை பெய்துவருவதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் என கூறப்படுகிறது.