ETV Bharat / state

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு இதுநாள்வரை ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை
கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை
author img

By

Published : Jul 26, 2021, 2:38 PM IST

நீலகிரி: கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கரோனா கள பணிக்காக 75 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் நாள்தோறும் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சென்று காய்ச்சல் பரிசோதனை, நோய் அறிகுறி உள்ளவர்களை கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்ததனர்.

பொதுநல சேவை

எங்கள் நலனையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாதங்களாக பணி செய்தோம். இதுவரை எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று களப்பணியாற்றியவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை

மேலும் பணி செய்ததற்கான ஒருநாள் தொகையாக முதலில் 640 ரூபாய் என கூறி பணியமர்த்தப்பட்டதாகவும் தற்போது நாளொன்றுக்கு 200 ரூபாய் வீதம் மட்டுமே சம்பள தொகை தருவோம் எனவும் கேத்தி பேரூராட்சி சார்பில் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இன்று (ஜூலை 26) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.