ETV Bharat / state

கரோனா தொற்று பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - tn_nil_02_ooty_collector_inspection_vis_tn10025

நீலகிரி: கரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

collector
collector
author img

By

Published : Apr 30, 2020, 3:33 PM IST

உதகையில் உள்ள காந்தல் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இவர்கள் வசிக்கும் பகுதியை நீலகரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு, ”ப்ளீச்சிங் பவுடர், கிருமி நாசினி, முகக்கவசங்களை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்பகுதியில் இருவர் நோய் தொற்று ஏற்பட்டு வீடு திரும்பிய நிலையில் இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

அதன்படி இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினிகள், சோப்பு, முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் நோய்த்தொற்று அறிகுறியுடன் காணப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியான உதகை காந்தல், கோத்தகிரி, S. கை காட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாம் தேதிவரை தனிமைப்படுத்தப்பட்டு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.

அதுமட்டுமல்லாது நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள சோதனை சாவடிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் எக்காரணம் கொண்டும் தளர்த்தப்பட மாட்டாது.

கூடலூர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் மருத்துவக் குழுவானது முகாமிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றது” என்றார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.