ETV Bharat / state

பழங்குடியின மக்களின் மொழியில் விழிப்புணர்வு! - tribal people

நீலகிரி: பழங்குடியின மக்களின் மொழியில் கரோனா தொற்று குறித்து பேரூராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

tribal people
பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு
author img

By

Published : Apr 23, 2021, 9:57 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதியில் வனப்பகுதி அதிகமாக உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி அதிக அளவிலான பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரம் மற்றும் விழிப்புணர்வு குறைவாக உள்ள இந்த மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் கிராமமான வாச்சி கொல்லி, கங்குரு மூலா பகுதிக்கு தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமையில் சென்ற அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மக்களுக்கும் சோப்பு, முகக் கவசங்கள் வழங்கினார்கள்.

மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கிருந்த பழங்குடியினர்கள் மத்தியில் தொற்று பரவாமல் இருக்க அவர்களின் மொழியில் எவ்வாறு கைகழுவ வேண்டும், முகக் கவசத்தின் முக்கியத்துவம் என்ன, மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.