கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த பரவக் காடு பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம். வழக்கம் போல் காலையில் தன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று உள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென பன்னீர்செல்வத்தை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிறுத்தையை விரட்டி அவரை மீட்டனர். தொடர்ந்து சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பன்னீர்செல்வத்தை அனுப்பி வைத்தனர்.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பன்னீர் செல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ் கோத்தகிரி, பரவக்காடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Republic day: கடமை தவறாத ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!