நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில் குறிப்பாக கேரட் பயிரிட்டுவதற்கு அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால், சிலர் அதை பொருட்படுத்தாமல் கடன் பெற்று பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் சந்தை கடைகளில் கடந்த பொங்கல் நாள்களில் கேரட் கிலோ 60 ரூபாய் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது கிலோ 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், முதலீட்டிற்காக செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கேரட் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மலை கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா.!