ETV Bharat / state

"மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை" - இராமதாசு பதில்! - PMK RAMADOSS

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று பிரகாசமான அரசியல் ஞான ஒளியை நான் பெறவில்லை, அது எனக்கு வருத்தமாக உள்ளது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் இராமதாசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாமக நிறுவனர் இராமதாசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 8:01 AM IST

சென்னை: “இராமதாசு அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, “அவரைப்போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை என பாமக நிறுவனர் இராமதாசு பதில் அளித்துள்ளார்.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், “அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து முதலமைச்சர்ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் இராமதாசு அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சர் பதில்: இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதை குறித்தும் கேட்கப்பட்ட செய்தியாளர்களிடத்தில் பேசிய முதலமைச்சர், "ஏற்கனவே துறை சார்ந்த அமைச்சரே அதுகுறித்து பேசிவிட்டார். அதை நீங்கள் ட்விஸ்ட் பன்னிட்டு இருக்க வேண்டாம். பாமக நிறுவனர் இராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால், தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை,'' என்று பதிலளித்திருந்தார்.

பாமக நிறுவனர் இராமதாசு பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அன்புமணி இராமதாஸ் கண்டனம்: முதலமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி இராமதாஸ்,"இப்படி ஒரு முதலமைச்சரை பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? முதலமைச்சர் இந்த அளவுக்கு பதட்டம் அடைந்திருக்கத் தேவையில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் (பாமக) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ராமதாஸ் குறித்து கருத்து.. முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாமகவினர்

பல்வேறு மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், நேற்று (நவ.27) புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பாமக நிறுவனர் இராமதாசு, முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, “அவரைபோல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை. நான் என்ன செய்ய முடியும், எனக்கு வருத்தமாக இருக்கிறது” என பதில் அளித்தார். தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்ட சென்றுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.