ETV Bharat / state

ஆட்சியரின் உத்தரவால் நீலகிரியில் சர்ச்சை! - inocent divya

நீலகிரி: சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் குப்பை தொட்டிகளை பொருத்தி நெகிழி குப்பைகளை சேகரிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அளித்த உத்தரவு சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

nilgris
author img

By

Published : Jun 4, 2019, 8:06 AM IST

நீலகிரி மாவட்டத்தில் 2002ஆம் ஆண்டு முதல் நெகிழி தடை அமலில் உள்ளது.

இந்தத் தடை முழுவதுமாக கடைப்பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நெகிழி தடையை முழுவதுமாக அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனினும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிக் கழிவுகளை அதிக அளவில் வீசி செல்வதாலும், மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மறைமுகமாக நெகிழி பயன்படுத்தி வருவதாலும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகள், தனியார் மினி பேருந்துகள், சுற்றுலாப் வாகனங்களினுள் குப்பைத் தொட்டிகளை பொறுத்தி நெகிழிக் குப்பைகளை சேகரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்களில் குப்பைத்தொட்டு பொருத்தும் காட்சிகள்

அந்த உத்தரவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இது நீலகிரி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிரவன் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய ஐந்தாயிரத்து 78 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் சுற்றுலா வாகனங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உதகை                                   03-06-19
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் குப்பை தொட்டிகளை பொறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது…..  
   நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. இந்த தடை முழுவதுமாக கடைபிடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா பிளாஸ்டிக் தடையை முழுவதுமாக அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் வீசி செல்வதாலும், மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மறைமுகமாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருவதாலும் பிளாஸ்டிக் புழக்கம் தொடர்கிறது. 
   அதனை கண்காணிக்காத அரசு அதிகாரிகள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், தனியார் மினிபேருந்துகள், சுற்றுலா வாகனங்களினுள் குப்பை தொட்டிகளை பொறுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மாவட்ட வாட்டாரா போக்குவரத்து துறை அதிகாரிகள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். நீலகிரி மாவட்ட எல்லையில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் எடுத்து வருவதை கண்காணித்து தடுக்காமல், பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வாகனங்களில் குப்பை தொட்டியை பொறுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன்: கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 5078 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தனியார் சுற்றுலா வாகனங்களிலும், அரசு பேருந்துகளிலும் குப்பை தொட்டிகள் பொறுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேட்டி: கதிரவன் - நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.