ETV Bharat / state

வனத்துறை சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு? திண்டுக்கல் சீனிவாசன் நக்கலான பதில் - Minister Dindigul Srinivasan tnpsc

நீலகிரி: வனத்துறை சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு குறித்த செய்தியாளர்களின் கேள்வியை புரிந்து கொள்ளாமல், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நக்கலாக பதிலளித்தது அங்கிருந்தவர்களை நகைப்புக்குள்ளாக்கியது.

திண்டுகல் சீனிவாசன் நக்கலாக பதில்
திண்டுகல் சீனிவாசன் நக்கலாக பதில்
author img

By

Published : Feb 7, 2020, 12:58 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் ரோந்து செல்வதற்கும், விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும் பயன்படுத்தபடுகின்றன. மேலும் ஆட்களை அடித்துக் கொல்லும் காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சென்று இந்த கும்கி யானைகள் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோயில் யானைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்துணர்வு நலவாழ்வு முகாம் போல் இந்த யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான பத்துணர்வு முகாம் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, யானைகளுக்கு உணவு பொருள்களை வழங்கினார். புத்துணர்வு முகாம் தொடங்கியதை அடுத்து 48 நாட்கள் வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுவதுடன் சத்தான உணவுகளும், மருத்துவ சிகிச்சைகளும், லேகியம், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளும் அளிக்கப்படும்.

திண்டுகல் சீனிவாசன் நக்கலாக பதில்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

புத்துணர்வு முகாம் நடத்துவதால் யானைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாகும் என்றார். டிஎன்பிசி முறைகேடு போல வனத்துறை சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார் குறித்த கேள்வியை புரிந்து கொள்ளாமல் பதிலளித்த அமைச்சர், யானையா டிஎன்பிசி தேர்வு எழுதபோகிறது என நக்கலாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் அவருக்கு புரியவைத்ததையடுத்து, வனத்துறை சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்குப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க: பழங்குடியின சிறுவர்களை அழைத்து செருப்பை கழற்றவைத்த அமைச்சர்

Intro:OotyBody:உதகை 06-02-20

முதுமலையில் உள்ள 26 வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது…வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனபகுதியில் ரோந்து செல்வதற்கும், விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும் பயன்படுத்தபடுகின்றன. மேலும் ஆட்களை அடித்து கொல்லும் காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றன. தமிழகம் முழுவதும் சென்று இந்த கும்கி யானைகள் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவில் யானைகளுக்கு தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தபடும் புத்துணர்வு நல வாழ்வு முகாம் போலவே இந்த யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தபட்டு வருகிறது.
இந்த நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான பத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்பு உணவு பொருட்களை வழங்கினார். புத்துணர்வு முகாம் தொடங்கியதை அடுத்து 48 நாட்கள் வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கபடுவதுடன் சத்தான உணவுகளும், மருத்துவ சிகிச்சைகளும், லேகியம், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு உணவுகளும் அளிக்கபடுகிறது. புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் 48 நாட்களுக்கு யானை சவாரியும் ரத்து செய்யபட்டுள்ளது. இதனிடையே புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடையே பேசிய திண்டுகல் சீனிவாசன்: புத்துணர்வு முகாம் நடத்துவதால் யானைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாகும் என்றார். அப்போது டிஎன்பிசி முறைகேடு போல வனத்துறை சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கேள்வி எழுப்பினர். அதனை கண்டு கோபம் அடைந்த வனத்துறை அமைச்சர் வனத்துறை சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கூறினார்.
பேட்டி: திண்டுகல் சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.