தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக பள்ளி, கல்லூரிகளில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். குன்னூரிலிருந்து ரண்ணிமேடு பகுதிக்கு கடந்த 24ஆம் தேதிமுதல் சொகுசுப் பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டுவருகிறது.
இதில், பயணிக்க சிறப்புக் கட்டணமாக ஒரு நபருக்கு 470 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சிறப்பு மலை ரயில் ஜனவரி 19ஆம் தேதிவரை இயக்கப்படுவதால் தற்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் மலை ரயிலில் பயணம் செய்வதற்கு பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ