நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக லிமிடெட் (டான்டீ) செயல்பட்டுவருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக டான்டீ நஷ்டத்தில் இயங்கிவந்தது. கரோனா பாதிப்புக்கு பிறகு, ஊரடங்கு காலத்தில் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் உபரி வருவாயை ஈட்ட தொடங்கியது. நாட்டின் பிற பகுதிகளில் தேயிலை உற்பத்தி பற்றாக்குறைான நிலையில் தென்னிந்திய தேயிலைக்கு கிராக்கி அதிகரித்தது.

தேநீரின் தரத்தை மேம்படுத்தியதால் டான்டீ தயாரிப்புக்கு அதிக விலை கிடைத்தது. இதில் அந்த மூன்று மாதங்களில் ஏழு கோடி ரூபாய் உபரி வருவாயை டான்டீ ஈட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அதன் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஊதிய அரங்குகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 2006ஆம் ஆண்டு தேயிலை தூள் சராசரி விலை கிலோவுக்கு 60 ரூபாய் இருந்த நிலையில் தற்போது கிலோவுக்கு ரூ.188 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் பாருங்க: தேயிலை பூங்காவின் நீர் தொட்டியில் சிக்கிய கரடி மீட்பு!