ETV Bharat / state

நீலகிரியில் தொடர் கனமழை: அப்பர் பவானி, அவலாஞ்சி அணைகள் திறப்பு! - nilgiris rain

நீலகிரி: தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அவலாஞ்சி, அப்பர் பவானி அணைகளிலிருந்து மூன்றாவது முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

dam-opening
author img

By

Published : Nov 1, 2019, 9:23 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த மழையின் காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கமராஜர் சாகர், கிளன்மார்கன், மரவகண்டி, போர்த்தி, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட 12 அணைகள் நிரம்பியுள்ளன.

மழையினால் அணைகள் நிரம்பியுள்ளதால் மாவட்டத்தின் பெரிய அணைகளான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானி அணை, 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி ஆகிய அணைகளின் பாதுகாப்பைக் கருதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணைகள் திறப்பு

அப்பர் பவானி அணையிலிருந்து 530 கனஅடி நீரும் அவலாஞ்சி அணையிலிருந்து 500 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் சமவெளி பகுதிகளான அத்திக்கடவு, பில்லூர் பகுதி கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலியால் நீலகிரியில் ரயில்கள் ரத்து!

Intro:OotyBody:உதகை 31-10-19

நீலகிரியில் பெய்து வரும் மழையினால் அவலாஞ்சி, அப்பர் பவானி 2 அணைகள் 3-வது முறையாக திறப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு .

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக உதகை, குந்தா, குன்னூர் , கோத்தகிரி ஆகிய பகுதியில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கமராஜர் சாகர், கிளன்மார்கன், மரவகண்டி, போர்த்தி, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட 12 அணைகள் நிரம்பியுள்ள நிலையில் மாவட்டத்தின் பெரிய அணைகளான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானி அணை, 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி ஆகிய அணைகளின் பாதுகாப்பை கருதி அப்பர்பவானி அணையிலிருந்து 530 கன அடி நீரும், அவலாஞ்சி அணையிலிருந்து 500 கன அடி நீர் திறந்து விட பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், சமவெளி பகுதிகளான அத்தி கடவு , பில்லூர் பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா அறிவுருத்தியுள்ளார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.