நீலகிரி மாவட்டம் உதகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி இன்று (பிப்.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கேரளாவில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநில சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். குடியிருப்புகளை தங்கும் விடுதிகளாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: யானையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்மணி - பரபரப்பு வீடியோ