நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ளது. சமீபகாலமாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், கரோனா ஊரடங்குக்குப் பிறகு, தேயிலை தொழில் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இதில், கடந்த வார ஏலத்தில் இதுவரை இல்லாத அளவு தேயிலைத் தூள் கிலோவுக்கு ரூ.137 வரை கிடைத்தது. இதனால் தேயிலை தொழிற்சாலைகளும், பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகளுக்கு, கிலோவுக்கு ரூ.21 முதல் ரூ.31 வரை வழங்குகின்றனர்.
அஸ்ஸாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ள பாதிப்பு காரணங்களால், அங்கு தேயிலையின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தென்னிந்திய தேயிலையை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் நீலகிரி தேயிலைத் தூள் அதிகம் விற்பனையானதுடன், லாபம் கிடைத்திருப்பது தேயிலை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் விளையும் தேயிலைக்கு இம்புட்டு விலையா..?