நீலகிரி மாவட்டம் குன்னூர் டிடிகே சாலையில் நகராட்சிக்கு சொந்தமான ஆடு, மாடு வதை செய்யும் கூடம் உள்ளது. இந்தக் கூடம் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இங்கிருந்து குன்னூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இறைச்சி விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
தற்போது இந்தக் கட்டடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு வதை செய்யப்படும் இறைச்சியால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் என நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், குன்னூர் நகராட்சி அலுவலர்கள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, வதை செய்யும் கூடத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் எனவும், இதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு