கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு ரூ.1000, அரிசி சர்க்கரை பருப்பு கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக நியாய விலைக்கடைகளில் வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில், கரோனா பாதிப்பால் பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் ரூ.1000, அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் குன்னூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு முறையாக நிவாரண நிதி, பொருட்கள் உள்ளிட்டவைகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட, அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களிடம் நியாய விலைப்பொருட்கள், நிவாரண நிதி ஆகியவை முறையாக வழங்கப்பட்டதா என்பதையும் நேரில் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: அத்துமீறி மீன் விற்ற கேரள மீன் வியாபாரிகள்: அபராதமும்... எச்சரிக்கையும்...!