நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது இறை தேடியும், தண்ணீர் தேடியும் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அப்போது மனிதர்களைத் தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் குப்பைகளை வாய்க்காலில் கொட்டிவருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வன விலங்குகள் அங்கு வருகின்றன. அப்போது காட்டுப் பன்றி ஒன்று குப்பைகளில் உள்ள உணவு உண்டு இறந்துள்ளது.
அதன் குட்டிகள் தாய் பன்றி இறந்தது தெரியாமல் பால் குடித்து வந்துள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் வனத்துறையினர் குட்டிகளை விரட்டி தாய் பன்றியை அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு - முதலமைச்சர் அறிவிப்பு!