ETV Bharat / state

விபத்தில்லா தினம்: நீலகிரியில் காவல் துறையினர் விழிப்புணர்வு - நீலகிரி

உதகை: வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக நீலகிரி காவல் துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்றைய தினத்தை விபத்தில்லா தினமாக அறிவித்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதமும் பின் அமர்ந்து பயணிப்பவருக்கு 100 ௹பாய் அபராதம் என மொத்தம் 600 ௹பாய் அபராதம் வசூலிக்கப்பட்டும்
author img

By

Published : Jul 17, 2019, 4:39 PM IST

தமிழ்நாட்டில் வாகன விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் கலந்துகொண்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன், 'இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் விபத்தில்லா நாளாக கடைப்பிடிக்கபடுகிறது' என்று தெரிவித்தார்.

creating awareness
காவல் துறையினர் வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

இன்று விபத்தில்லா நாள் என்பதால் உதகை நகரப் பகுதிகளில் காவல் துறையினர் உள்ளூர் வாகன ஓட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கினர்.

விபத்தில்லா தினம் இன்று அறிவிப்பு

மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி 500 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின் அமர்ந்து பயணிப்பவருக்கு 100 ரூபாய் அபராதம் என மொத்தம் 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுவருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro:OotyBody:
உதகை 17-07-19
நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தில்லா நாளாக காவல்துறை அறிவிப்பு. வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வாகன விபத்துகளால் அதிகரித்து வரும் உயிரிழப்பை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இன்று நீலகிரி மாவட்டம் விபத்தில்லா நாளாக கடைப்பிடிக்கபடுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்தார். இன்று விபத்தில்லா நாள் என்பதால் உதகை நகர பகுதிகளில் காவல்துறையினர் உள்ளூர் வாகன ஓட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்க பட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு உத்திரவின்படி 500 ௹பாய் அபராதமும், தலைகவசம் அணியாமல் வாகனத்தின் பின் அமர்ந்து பயணிப்பவருக்கு 100 ௹பாய் அபராதம் என மொத்தம் 600 ௹பாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேட்டி : தங்கவேல் - மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.