நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்திவருகின்றன.
இதைத் தொடர்ந்து உதகை, கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், குருத்துகுளி, கோத்தகிரி மிசன் காம்பவுண்ட் பகுதிக்கு தினந்தோறும் கரடி ஒன்று வருகிறது. அந்தக் கரடி சாலைகளிலும், கட்டடங்களின் மீதும் நடந்து செல்கிறது.
பகல் நேரங்களில் புதர்களுக்குள் இருக்கும் கரடி இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்புகளுக்கு வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்த கரடியை பிடிக்க ஒரு கூண்டு வைக்கபட்டுள்ளது.
ஆனால் அந்த கூண்டிற்குள் கரடி சிக்கிக் கொள்ளாமல் ஏமாற்றி வருகிறது. எனவே கூடுதலாக கூண்டுகளை வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.