ETV Bharat / state

குன்னூரில் புல் வகைகளைக் கொண்டு புதிய பூங்கா - nilagiri sims park

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், புல் வகைகளைக் கொண்டு புதிய பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

New park with grass varieties
New park with grass varieties
author img

By

Published : Oct 5, 2020, 7:11 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா செயல்பட்டு வருகிறது. சிம்ஸ் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பழமை வாய்ந்த மரங்கள் அதிகம் உள்ளன. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால், 1874ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 86 தாவரக் குடும்பங்களைச் சார்ந்த 1,200 வகையான தாவரங்கள் உள்ளன.

மேடு, பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும், பல்வேறு அம்சங்களுடன் இப்பூங்கா உள்ளது. இதில் நர்சரி பகுதியில் காலியான இடத்தில் தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதில் 10 சென்ட் இடத்தில் தித்தி கிராஸ், பெர்முடா புல், நீலகிரி அரிய வகை புல் உள்பட பல்வேறு புல் வகைகள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. வரும் மே மாதம் கோடை சீசனுக்குள் பல்வேறு மலர்ச் செடிகள் நடவு செய்து மேலும் நடைமேடை அமைத்து சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

'விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டம்' - வேளாண் அறிஞர் பாமயன் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.