நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வை அதிகரித்து பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், குன்னூர் இன்கோ சர்வ் அலுவலகத்தில் புதிய ’கோவிட் கேர்’ இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோவிட் கண்காணிப்பு மாவட்ட அலுவலர் சுப்ரியா சாகு, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. இதேபோல் கரோனோ பாதிப்பு ஏற்பட்டவர்களில், 90 விழுக்காடு நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1. 35 லட்சம் பேருக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி, நோய் பாதித்தவர்களை மருத்துவர்கள் குழுவாகக் கண்காணிக்கின்றனர். தற்போது மக்களிடையே கரோனா விழிப்புணர்வை அதிகப்படுத்தி, சிகிச்சை தொடர்பான தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை உள்ளிட்ட விபரங்களுடன் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்" என்றனர்.
இதையும் படிங்க... 60 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இருவருக்கு சிகிச்சை!