நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி, ராஜாஜி நகர் பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுற்றியுள்ள 3 கிமீ தொலைவுள்ள பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் நகரின் பல பகுதிகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், ஒட்டுப் பட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய இரண்டு இறைச்சிக் கடைகளிலிருந்து 60 கிலோ இறைச்சிகளை சுகாதார ஆய்வாளர் மால்முருகன் தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமின்றி, அனுமதியின்றி கடைகள் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அனுமதியின்றி விற்கப்பட்ட கபசுரக் குடிநீர் பொடி பறிமுதல்