கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் பகுதிகள், சீல் வைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராஜாஜி நகர், பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 6 பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அதனால் பொது மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர்.
பாதிக்கப்பட்ட இருவரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்தும் சீல் வைக்கப்பட்ட பகுதிகள் திறக்கப்படாததால் பள்ளி வாசல் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் மாணவ, மாணவிகள்; அரசைக் கண்டித்து தர்ணா