நீலகிரி மாவட்டம் உதகைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து உதகை காபிஹவுஸ் சந்திப்பில் மார்ச் 27ஆம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "2006ஆம் ஆண்டில் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் அப்போதெல்லாம் மக்களைப் பற்றிய அக்கறை கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார். எங்கு சென்றாலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் புகாரைக் கூறுகிறார்.
நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர். பெண்களை இழிவாகப் பேசிவருகிறார். பெண்கள் யாரும் இந்த முறை திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமிபோல் சாமானியர்தான் முதலமைச்சராக முடியுமே தவிர, ஒருபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது" என்றார்.
இதையும் படிங்க:ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உட்பட 14 கட்சித் தலைவர்கள் பரப்புரை