இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் அருகில் மரம் நட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட் தொடங்கும் முன்னர் ஒவ்வொரு துறையிலும் ஆய்வு நடத்தப்படும். முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் கால்நடை மருத்துவர் இல்லாதது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.
அப்போது கூடலூர், பந்தலூர் பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் கடத்தப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், யாரும் இதுவரை எனக்கு தகவல் அளிக்கவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மை என்ற பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர்கள் மேலும் சில புகார்களை முன்வைக்க, ஏதாவது புகார் இருந்தால் எழுதிக்கொடுங்கள். நான் இங்குதான் இரண்டு மணி நேரம் இருப்பேன். நீங்கள் பெட்டிசன் எழுதிக் கொடுங்கள், தவறு யார் செய்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராஜ், முதன்மை வனக்காப்பாளர் சஞ்ஜய் ஸ்ரீவஸ்தவா தலைமையில் வனத்துறையினர் பங்கேற்றனர்.