நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் குறும்பர் இன மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே புதுக்காடு, சின்ன குரும்பாடி, பெரிய குரும்பாடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காப்பு வனப்பகுதி இல்லாத இடத்தில் வசித்தும் இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளோருக்கு அடுத்தக் கட்டமாக பட்டா வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து பர்லியார் ஊராட்சி, வனத்துறை, வருவாய் துறை மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க:மலைவாழ் மக்களுக்கு அனுபவ நில வீட்டுமனை பட்டா வழங்கும் ஆலோசனை கூட்டம்