நாடு முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள், இறைச்சி, மளிகைப் பொருள்களை வாங்க மட்டுமே அவர்கள் வெளியே வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குன்னூரில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் எந்த ஒரு அனுமதியுமின்றி இப்பகுதியில் இறைச்சிக் கடைகள் இருப்பதாகக் கூறி மருந்துகளை தெளித்து 500 கிலோவுக்கு மேல் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இறைச்சி வியாபாரிகள் நகராட்சி அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க... சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 500 மதுபாட்டில்கள் பறிமுதல்