நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரேவனு கைத்தலா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தத் தொடர்பால் ஜெயக்குமார் அப்பெண்ணின் மகளையும் பாலியல் வண்புணர்வுக்கு தூண்டியுள்ளார்.
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது வரை கோவை மத்திய சிறையில் இருந்துவருகிறார்.
இதனிடையே நேற்று இந்த வழக்கு விசாரணை உதகையிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், குற்றவாளியான ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை